tamilnadu

img

மேற்கு வங்கம் - ஆபத்து நீங்கிவிடவில்லை!

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறதென்று மாநில திரிணாமுல், அரசு சுய திருப்தியில் உள்ளது. ஆனால், ஆபத்து காத்திருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிகமான அளவில் பரிசோதனைகள் நடைபெறுகிறது என்றெல்லாம் கூறி, நிலைமை நல்லபடியாக இருக்கிற தென்று திரிணாமுல் காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. ஆனால், ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் திரும்பவும் நிலைமை மோசமடைய வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்ற னர்.

புகழ்பெற்ற மருத்துவர் ஃபௌட் ஹலீம், அரசு புள்ளிவிபரங்களின் படியே சில மாவட்டங்களில்தான் வைரஸ் தொற்று வெளிப்பட்டுள்ளது; தொற்று பரவல் முறை இன்னும் தெளிவாகவில்லை; அதற்குள், தொற்றால் பாதிப்படைந்த வர்கள் விகிதம் குறைந்து விட்டதாக ஆறுதல்அடைவது அறிவுடைமை ஆகாது. பரிசோத னைகள் அதிகரிக்கப் பட வேண்டும். கட்டுப்பாட்டுமண்டலங்களில் பரிசோதனை விபரங்களை அரசு வெளியிடாதது  கவலை அளிக்கிறது.கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் சுயதிருப்தி கொள்வது அடுத்த வெடிகுண்டுக்காக காத்திருப்பது போன்றது என்கிறார்.

உணவுப் பற்றாக்குறையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும்
நாட்டின் கிராமப்புற பகுதிகளில் மக்கள் உண்ணும் உணவு தானியங்களின் அளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதை பல்வேறு ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.நாடு கொள்ளை நோய்த் தாக்குதலின் இடைப்பட்ட காலத்தில் இருக்கும் நிலைமையில் இது மிகவும் கவலை அளிக்கும் விசயம். நீண்ட கால ஊரடங்கு, ஊதியமில்லாத நிலை அல்லதுபற்றாக்குறை யான ஊதியம், மேற்குவங்கத்தில்11 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும்திரும்பியது ஆகியவற்றின் காரணமாக மக்கள்கையில் பணமின்றி போதுமான அளவில்  உணவுஉண்ண முடியாத நிலையில் உள்ளனர்.

மாநிலத்தில் முப்பது லட்சம் முதல் நாற்பது லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்தி என்பது உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தது. ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் போதுமான அளவில் உணவு எடுத்துக் கொள்ளவில்லை யெனில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நிச்சயமாக குறைந்திருக்கும். அவர்களுக்கு மத்திய அரசு உணவு தானியங்களை பெருமளவில்  உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழி லாளர்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கு கரிபி கல்யாண் ரோஜ்கார் யோஜனா எனும் திட்டத்தின்கீழ் பீகார், ஒடிசா, ஜார்கண்ட்,  உ.பி, ம.பி. மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில்உள்ள 116 மாவட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.ஆனால், பாஜக மத்திய அரசு மேற்கு வங்கத்தை  இத் திட்டத்தில் இணைக்கவில்லை. பயனாளிகள் பட்டியலை மாநில அரசு ஒப்படைக்காததால் மே.வ. மாநிலத்தை சேர்க்கமுடியவில்லை என்று பாஜகவும்- உரிய தகுதியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தும் வேண்டுமென்றே மேற்கு வங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக திரிணாமுல் காங்கிரசும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டு கின்றனர்.இவர்களின் சச்சரவால் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு தளர்வுகளாலும், நிலைமை சீராக இருக்கிறது என்று மாநில அரசு கூறுவதாலும்  சமூக இடைவெளி,முகக் கவசம் அணிதல் போன்ற சுயக் கட்டுப்பாடுகளை மக்கள் கைவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளது. புகழ் பெற்ற கொல்கத்தா மருத்துவர் தமால் லாஹா, “மக்களின் இந்த மனநிலை ஆபத்தானது; வைரஸ் மாநிலத்தை விட்டு இன்னும் போய்விடவில்லை; வைரஸ் இன்னும்
இருக்கிறது; மக்களை அதனால் கொல்ல முடியும்” என்கிறார்.

புயல் நிவாரண முறைகேடுகள்
ஜூன் 24 அன்று   கோவிட் 19 பற்றி விவாதிப்பதற்காக மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதே நாளில்தான் திரிணாமுல் காங்கிரசின் பொருளாளரும் , தெற்குபர்கானா சட்ட மன்ற உறுப்பினருமான தமோனஷ் கோஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அரசு ஆட்கொல்லி நோயை மட்டும் சந்திக்க வில்லை. ஆம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலோர மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், உள்ளாட்சித் தலைவர்களும் முறைகேடு செய்துள்ளதால் மக்களின் கடுமையான அதிருப்தியையும் சேர்ந்து சந்திக்க வேண்டியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவாதத்தை விட ஆம்பன்புயல் நிவாரண முறைகேடு பற்றிய விவாதமே முக்கிய பேசு பொருளாகியது. புயல் நிவாரண முறைகேடு பிரச்சினை மாநிலத்தை உலுக்கி கொண்டிருக்கிறது. புயலில் சேதமடைந்த வீடுகளை மராமத்து செய்வதற்கு மாநில அரசு விடுவித்த நிதியை ஆளும் கட்சியினரும், உள்ளாட்சித் தலைவர்களும் பங்கு போட்டுக் கொண்டனர்.மக்களின் ஆவேசத்தால் தவறு செய்த தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப் படுமென்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பிரண்ட்லைன் ஜீலை 17,2020 இதழில்  
சூரித் சங்கர் சட்டோபாத்யாயா  கட்டுரையிலிருந்து...
- தொகுப்பு: ம.கதிரேசன்

;